கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பள்ளிக்கூடம் திறந்தாச்சு. அரசு, ஆசிரியர், பெற்றோர் கடமைகள்..

பள்ளிக்கூடம் திறந்தாச்சு.   அரசு, ஆசிரியர், பெற்றோர் கடமைகள்..

சு. உமா மகேசுவரி ஆசிரியர்-எழுத்தாளர் கல்வி செயற்பாட்டாளர்;

இதோ ஜூன் மாதம் பிறந்து விட்டது. புதிய கல்வியாண்டும் தொடங்கிவிட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள வீடுகள் எல்லாம் காலை நேரம் முதலே பரபரப்பாகிவிடும். பள்ளி வளாகங்கள் தூய்மையாகி பொலிவு பெற்றுவிடும். அன்று மலர்ந்த மலர்களாகக் குழந்தைகள் மகிழ்ச்சியாக வலம் வருவார்கள். இவர்களது இந்த மகிழ்ச்சி சற்றும் குறையாமல் அவர்களைக் கற்றலில் ஈடுபடுத்துவது தான் மிக இன்றியமையாதது. அரசுப்பள்ளிகள் அடித்தட்டு ஏழை மக்களின் ஒரே புகலிடமாக விளங்குபவை அரசுப்பள்ளிகள்தான். அதனால்தான் தனியார் பள்ளிகள் பெருகி வந்தாலும் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதற்குக் காரணம் அரசுப்பள்ளிகளில் பல சிறந்த முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருவதே. நம் தமிழ்நாட்டில் 37,500 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் படிக்கும் மாணவர்கள் 52,75,000 க்கும்மேற்பட்டோர். இவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் அரசு மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது. அரசு திட்டங்கள் மீது நமக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் , லட்சக்கணக்கான மாணவர்கள் திட்டங்களால் பயனடைந்து வருவது வரவேற்கத்தக்கதே.;

Read More ...

Related Post