வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
ஒரு நல்ல எண்ணம் தோன்றியவுடன் அதைச் செயலாக மாற்ற வேண்டும் என்பதற்கு விநோபா பாவேயின் வாழ்க்கை ஆகச்சிறந்த உதாரணம். 1951இல், 55 வயதான அவர் தெலங்கானாவின் போச்சம்பள்ளி கிராமத்திற்குச் சென்றபோது, நிலமற்ற ஏழைகள் தங்களுக்கு நிலம் வேண்டும் என்று கேட்டனர். அதைக் கேட்ட விநோபா, “நிலம் வேண்டும் என்றால், அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிராமல் அதற்கான வழியை இங்கேயே தேடலாமே!” என்று நினைத்தார்; உடனே தயக்கமின்றி அங்கிருந்த நில உரிமையாளர்களிடம், “இந்த மக்களுக்காக யாராவது நிலம் தர முன்வருகிறீர்களா?” என்று கேட்டார். அப்போது வேதிரே ராமச்சந்திர ரெட்டி என்ற நில உரிமையாளர் 100 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்க முன்வந்தார்.;