பேராசிரியர் பெ.விஜயகுமார்.;
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நாவல் இலக்கியம் ஐரோப்பிய மொழிகளில் மிகப் பெரும் வெற்றி பெற்றது. காவியமும், கவிதையும் கோலோச்சிய சூழலில் எளிய மனிதர்களும் படித்து இன்புற உரைநடையில் எழுதப்பட்ட நாவல் பரந்த வாசிப்பு உலகை உருவாக்கியது. இவை நவீன காவியம் என்று போற்றப்பட்டது. ஆங்கில நாவல் உலகிற்கு ஜேன் ஆஸ்டின் அளித்துள்ள கொடை அளப்பரியது. பெண்கள் நாவல் எழுத்துலகில் நுழைந்திட முடியாத காலத்தில் தன் அடையாளத்தை மறைத்தே நாவல்கள் படைத்தார். ’எம்மா’ ’மான்ஸ்ஃபீல்டு பார்க்’, ’சென்ஸ் அன் சென்சிபிலிடி’, ’நார்த்தங்கர் அபி’, ப்ரைடு அன் ப்ரஜுடிஸ், ’பெர்சுவேஷன்’ ஆகிய ஆறு நாவல்கள் எழுதி உலகின் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார் ஜேன் ஆஸ்டின். ;
