திரு. சண்முக. ஞானசம்பந்தன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி நிலையம்;
காப்பிய இலக்கியங்கள் ஒரே காலகட்டத்தில் தோன்றியவை அல்ல. சங்கம் மருவிய காலமான கி.பி, இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மட்டுமே எனலாம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே தன்மையிலான பெருங்காப்பிய வகையைச் சார்ந்தன எனினும், சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்பட்ட போதும் அது ஆய்வுக்குரியதே. மணிமேகலை ஆக்கப்பட்ட காலத்திலேயே சேரன் செங்குட்டுவன் - இளங்கோவடிகள் - நிமித்திகர் -கண்ணகி கதையை சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகளுக்குச் சொன்னது போன்ற சாநித்தியம் உண்டாக்கும் புனைவுகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்.;
