திரு. சண்முக. ஞானசம்பந்தன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி நிலையம்.;
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் இரண்டாவதாக வைத்து எண்ணப்படுவதாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார், அகத்தியர் முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் தோன்றுவது ”மணிமேகலை”யில் தான். இதே போல காஞ்சி நகரும் பேசப்படுவது இந்நூலில் தான். மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஊ. 450-550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார். பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார். ;
