கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

விதிவழி செல்லும் வாழ்க்கை...

விதிவழி செல்லும் வாழ்க்கை...

பேராசிரியர் பெ. விஜயகுமார்;

தாமஸ் ஹார்டி (1840-1925) ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர் என்றும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலாசிரியர் என்றும் கொண்டாடப்படுகிறார். ஏராளமான கவிதைகளையும், சிறந்த நாவல்களையும் தாமஸ் ஹார்டி எழுதியுள்ளார். ’தி ரிடர்ன் ஆஃப் தி நெட்டிவ்’ நாவலின் முதல் அத்தியாயம் ஹார்டி நாவல்கள் அனைத்திலும் சிறந்த தொடக்கமாகப் போற்றப்படுகிறது. ஊரின் எளிய மக்கள் தங்களின் அன்றாட வாழ்வியலை மட்டுமே பேசிச் செல்வதைக் காண்கிறோம். அவர்கள் நாட்டு நடப்பு தெரியாதவர்கள். ஆன்மீகம் புரியாதவர்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்வுதான். அவர்களின் எளிய உரையாடல்களில் வெளிப்படும் கேலியும், கிண்டலும், கூத்தும், கும்மாளமும் அலாதியானவை! ஊரின் நடுவில் ’சிகப்பு மனிதன்’ டிகரி தன் குதிரை வண்டியை ஓட்டிச் செல்வதில் நாவல் தொடங்குகிறது. மெம்மறி ஆடுகளுக்கு சிகப்புச் சாயம் பூசுவது அவன் தொழில். தொழில் நிமித்தம் அவன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை சிகப்பாகத் தோற்றமளிக்கிறான். ஊரில் எல்லோரும் ’சிகப்பு மனிதன்’ என்று அழைக்கும் டிகரி வெள்ளை மனசுக்காரன். ;

Read More ...

Related Post