பேராசிரியர் பெ. விஜயகுமார்;
சந்தோஷ் குமார் மலையாளத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். அந்தகாரனழி எனும் நாவலுக்கும், சாவு களி எனும் சிறுகதைத் தொகுப்புக்கும் கேரள சாகித்ய அகாதமி விருதினையும், ’ஆ பிரதேசத்து உறும்புகள்’ என்ற படைப்பிற்காக கேரள பால சாகித்ய அகாதமி விருதினையும் பெற்றவர். அந்தகாரனழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ’க்ராஸ் வெர்டு’ விருது வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட நூல்களின் பட்டியலில் இடம் பெற்றது. தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் முப்பதாண்டு காலம் பணியாற்றிய சந்தோஷ் குமார் இப்போது திருச்சூரில் வாழ்ந்து வருகிறார். சந்தோஷ் குமார் எழுதிய ‘வாக்குகள்’ எனும் நாவலை ‘வார்த்தைகள்’ என்று தலைப்பிட்டு சிதம்பரம் ரவிச்சந்திரன் அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ;
