பேராசிரியர் பெ.விஜயகுமார்.;
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். சிறப்பொவ்வா/ செய்தொழில் வேற்றுமை யான்.’ என்று வள்ளுவரும். ’சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லலாகாது பாப்பா!’ என்று பாரதியாரும், சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதி வழுவா, இட்டார் பெரியோர். இடாதார் இழிகுலத்தோர்’ என்று ஒவ்வை மூதாட்டியும், இன்னும் பிறரும் இந்தியாவில் நிலவிடும் சாதியப் பாகுபாடுகளை ஒழித்து சமத்துவ சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, காலந்தோறும் போராடியும் வருகின்றனர். இவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் ’ஹரிஜனத் தந்தை’ என்றழைக்கப்படும் அமரர் அ.வைத்தியநாத அய்யர் ஆவார். இன்று தலித்துகள், பட்டியலினத்தவர்கள் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களை அன்று காந்தி ’கடவுளின் குழந்தைகள்’ என்ற அர்த்தப்படும்படி ஹரிஜனங்கள் என்றழைத்தார். ;
