கே.கல்பனா அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளைச் செயலாளர்;
கலை சூழ் உலகு என்பதே பொதுவானக் கோட்பாடு. கலைகளே இவ்வுலகில் அனைத்திற்கும் ஆதாரம் மற்றும் அச்சாணியாகும். கலை இல்லாவிடில் இவ்வுலகு வெறும் சூனியமாகும். அதில் வாழும் மனிதர்களாகிய நாம் பகுத்தறிவற்ற விலங்கிற்கு சமமாவோம். கலை என்பது மனித உணர்வுகளின் நுட்பமான வெளிப்பாடு. அந்தக் கலை வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்றுவரை, பெண்கள் கலைகளில் தங்கள் சிந்தனை, அனுபவம், உணர்ச்சி ஆகியவற்றை கலந்து மனித சமுதாயத்தின் பண்பாட்டை வளப்படுத்தி வருகின்றனர். ;
