எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;
தமிழோசை செவிக்கின்பம், தமிழ்ச்சொல் நாவுக்கின்பம், தமிழ் எடுத்து, கண்ணுக்கின்பம், தமிழ் உயிருக்கின்பம்!. இன்று ‘நெடு” என்ற சொல்வினைப் பற்றியும் அதனைத் தொடர்ந்து வரும் சொற்களைப் பற்றியும் பார்ப்போம். நெடுதல் என்றால் நீளுதல், தூரமாகச் செல்லல், தாமதித்தல், உயருதல் எனப் பலவிதப் பொருளில் வரும், நெடுங்கடை என்பது ஏதோ ஒரு கடையின் பெயரில்லை. அது கட்டிடத்திற்கு முன் இருக்கும் நுழை வாயிலைக் குறிப்பதாகும். வீடுகளில் பால்கனி என்ற உப்பரிகை இருக்குமல்லவா? அதுதான் நெடுங்கடை நெடுங்கணக்கு என்ற சொல்லை அறிந்துண்டா? வாராக் கடனையும், பழங்கடனையும் குறிப்பது தான் அச்சொல் என அகராதி குறிப்பிடுகிறது. அரிச்சுவடி எழுத்துகளும் நெடுங் கணக்கே. ;
