எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன் ;
விஞ்ஞான உலகம் ஆங்கிலத்தைத் தத்து எடுத்துக் கொண்டாலும், தமிழ் பேசும் தமிழர்களின் விஞ்ஞான, மெய்ஞான அறிவே அயல்நாட்டில் செல்லுபடியாகிறது. இதுதான் உண்மை. இன்று ‘ந” என்ற எழுத்தும், அதன் சொல் வரிசையும் எப்படியெல்லாம் நமது மொழிப் பூங்காவில் உலா வருகிறதெனப் பார்ப்போம். ‘ந” எழுத்து ஒற்றைச் சொல்லாகப் பல பொருளில் வரும், சிறப்பு, மிகுதி என்ற பொருளைத் தரும். நகம், இந்த நகம் தான் எத்தனை அலங்காரப் பொருளைத் தருகிறது தெரியுமா? பல சொற்கள் அவற்றுள் வழக்கொழிந்து போனது இப்படித்தான். அக்காலத்தில் முடி திருத்தும் நாவிதனை நகத் குத்தன் என்றார்கள். யானையைக் கூட நகசம் என்றே குறிப்பிட்டார்கள். அங்குசத்திற்கும் நகசத்திற்கும் தொடர்புள்ளது போல் தெரிகிறதல்லவா? ;
