முனைவர் ப. சாந்தி பேராசிரியர், பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்;
மிக நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்களுக்கென தனி இடம் இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது. சங்க காலம் முதல் இன்று வரை இலக்கியங்களைப் படைப்பதில் பெண்களும் முன்நிலைகளில் இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர் என்பதே உண்மை. சங்ககாலம் சங்கப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381. இவற்றில் ஆண்பாற் புலவர்களும் பெண்பாற் புலவர்களும் உள்ளடங்கிய 473 புலவர்களின் பெயர்கள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் பல பெயர்கள் அவர்களது இயற்பெயர்கள் அல்ல. அத்துடன் சில புலவர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை. அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். இதிலும் பெண் புலவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ;
