விஜயானந்த லட்சுமி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சென்னை;
குறிஞ்சிப்பாட்டு என்பது, சங்க இலக்கிய பதினெண்மேற்கணக்கு நுல்களுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் எட்டாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கபிலர். சங்க இலக்கியப் பாடல்களில் மிகுதியான பாடல்கள் கபிலர் இயற்றியவையே. குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் மக்களின் அக ஒழுக்கம் சார்ந்த பண்பாட்டினை விளக்குவதற்காகப் பாடப்பட்டது என்பர். இது 261 அடிகளை உடையது. இது அகப்பாடல் சார்ந்த இலக்கியம். இந்தக் குறிஞ்சிப்பாட்டுக்குப் பெருங்குறிஞ்சி என்ற பெயரும் உண்டு. மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குளிர்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன. மிக அரிதான பல தாவரங்களைக் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகிறார் கபிலர். இதில் செங்காந்தள் மலர் தொடங்கி குறிஞ்சி நிலத்தில் பூத்துக்குலுங்கிய 99 மலர்களைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ;
