தேரூர் மு.கோபி ;
பெயர் என்னவோ புத்திசிகாமணி. ஆனால் ஆள் சரியான மக்கு. அவனுக்கு காப்பி கொடுத்துவிட்டு இது காப்பி இல்ல.. டீ எனச் யாராவது அழுத்திச் சொன்னால், ஓருவேளை டீயாக இருக்குமோ என நம்பிவிடும் அளவுக்கு மக்கு. ஒரு வேலை சொன்னால் அதைமட்டும் செய்வான். அதையும் சரியாகச் செய்வான் என்று சொல்வதற்கில்லை. ஒரு அமாவாசையன்று சம்பிரதாயத்துக்காக வாழைக்காயில் ஏதாவது சமையல் செய்து வைக்கவேண்டுமே என்பதற்காக அவனது மனைவி நாகராணி 50 ரூபாய் கொடுத்து வாழைக்காய் வாங்கி வரச் சொல்ல, நூறு ரூபாய்க்கும் வாழைக்காய் வாங்கி வந்த பிரகஸ்பதி அவன். ;