ஆடிட்டர் கலாவதி ஜெய்;
பிபிசி உலக அளவில் 100 சிறந்த ஆளுமைகளை தேர்வு செய்திருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை சார்ந்த சாதனையாளர்கள். இந்தியாவைச் சேர்ந்த சிலரும் இடம் பெற்றிருந்தனர். இந்தப் பட்டியலில் டெல்லியை சேர்ந்த பூஜா ஷர்மா பெயரும் இருந்தது. இவர் தொழிலதிபர் அல்ல. ஆதரவற்றோரின் சடலங்களை அவரவர் மத சம்பிரதாயத்துக்கு உட்பட்டு இறுதிச்சடங்குகளை செய்பவர். டெல்லியில் உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் தெரியாத சுமார் 5,000க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளதாகக் கூறுகிறார் பூஜா ஷர்மா. மேலும் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஆதரவற்றவர்களின் உடல்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்கு செய்து வருகிறார்.;