புலவர் அ.கணேசன்;
அகிலமெல்லாம் கட்டி ஆளினும் ஆசைக்கோர் அளவில்லை. அடிமைப்படுத்துவதையும், அரும்பெரும் பொருள்களை அபகரிப்பதையும் உலகின் பல பாகங்களிலும் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். “நாம் இருக்கும் நாடு நமதென்பதறிவோம் இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்” என்று சுட்டிக்காட்டுவதற்கே விடுதலை வேட்கை வீரர்கள் தேவைப்பட்டனர். வரிந்து கட்டிக்கொண்டு போராடவும் துணிந்தனர் பல்வேறு முறைகளில்! அவர்களிலே நாடகக்கலையையும் தெய்வீகப் பாடல்களையும் விடுதலைப் போராட்டக் கருவிகளாக்கி ஆங்கிலேயரை கிடுகிடுக்க வைத்தவர்.. நடுநடுங்கச் செய்தவர் விடுதலைப் புயல் - வீரத் தியாகி எஸ்.எஸ்.விசுவநாத தாஸ். சிவகாசி சுப்பிரமணியம் - ஞானம்மாளின் இரண்டாவது மகனாக 1886 சூன் 16ஆம் நாளில் பிறந்தவர் பிறந்தவர் விசுவநாததாஸ்.;