பேராசிரியர் முனைவர் உ.அனார்கலி;
இஸ்லாமிய இலக்கிய வரலாறு, தமிழிலக்கிய வரலாறு ஆகிய இரண்டிலும் மைல்கல்லாக விளங்கும் சீறாப்புராணம் எனும் புகழ்மிக்கக் காப்பியத்தை எழுதியவர் உமறுபுலவர். இவரது முன்னோர்கள் அராபிய நாட்டைச் சார்ந்தவர்கள். அராபிய மண்ணைச் சார்ந்த அப்துல்லாஹ் இப்னு பாசிர் என்பவர் தன் மகள் கதீஜாவிற்குத் திருமணம் செய்ய விரும்பி, மணமகன் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகனோ, உடனடியாய் திருமணம் செய்ய வேண்டும். இல்லையெனில் வணிகத்தின் பொருட்டு சிரியா நாட்டுக்குச் செல்வதாகக் கூறினார். இதைக் கேட்ட, அப்துல்லாஹ் இப்னு பாசிர் அதிர்ச்சிக்குள்ளானார். திருமணத்துக்கு மணமகன் தான் செலவு செய்ய வேண்டும். பணமில்லாத காரணமாகவே அவர் சிரியா செல்ல முற்படுகிறார். ;