ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம்;
அறிவியல் வளர்ச்சியானது, மனிதனுக்குச் சாதகமான விஷயங்களை அள்ளித் தந்தாலும் கூடப் பாதகமான விஷயங்களையும் பஞ்சமின்றி வழங்கி வருகிறது. ஆன்லைன் மோசடி குறித்தும் அதில் ஏமாறுபவர்கள் குறித்தும் ஏராளமானச் செய்திகளை அன்றாடம் பார்த்து வருகிறோம். அண்மையில் அதன் புதிய வடிவாக ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’ என்ற புதியவகை மோசடி வேகமெடுத்துவருகிறது. பிரதமர் மோடி கூட அண்மையில், ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது, “சமீப காலமாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிகரித்து வருகிறது. அது தொடர்பாகக் கவனமாக இருக்கவேண்டும். சமூகத்தில் கூட்டு முயற்சியால் மட்டுமே இதுபோன்ற சவால்களை நாம் சமாளிக்க முடியும்” என்றார்;