கே.பி.பாரதி, மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;
கடந்த 08.03.1985ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, விருதுநகர் மாவட்டம் உருவானது. தற்போது, நிர்வாகக் காரணங்களுக்காக இம்மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், இராஜபாளையம், வத்றாயிருப்பு, வெப்பக்கோட்டை தாலுக்காக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மன்னாராட்சி காலத்தில் அளற்று நாடு, ஆன்மா நாடு, கருஞ்சோநாடு, கண்டநாடு, காளையிருக்கை, கருநிலக்குழுநாடு, சாழ்நாடு, செங்குடி நாடு, திருமல்லிநாடு, பருத்திக்குடி நாடு, வயலூர் நாடு, வெண்மைக்குடி நாடு, வெண்டிநாடு என்று நாட்டுப் பிரிவாகப் பிரித்து ஆளப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ;