ஆசிாியா் ப.திருமலை பட்டறிவுப் பதிப்பகம்;
என்ன நைநா.. உங்க முன்னாடி கிண்ணத்திலுள்ள நீரில் ரவுண்ட் ரவுண்டாக ஏதோ மிதக்கிறதே என்ன நைநா..? கேட்டவாறு வந்தார் மைனா. காய்ந்த அத்திப்பழத்தை ஊறவைத்திருக்கிறேன். அத்திப்பழத்தில் அதிக பொட்டாசியம் உள்ளது. கூடுதலாக, அத்திப்பழத்தில் குளோரோஜெனிக் ஆசிட் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஊறவைத்த அத்திப்பழத்தையும், அதன் தண்ணீரையும் குடிக்கலாம். உடல் எடையையும், இரத்த அழுத்தத்தையும் இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் கணிசமாகக் குறைக்கிறது. தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம் என்கிறார்கள். என்ன காலையிலேயே வந்திருக்கிறாய்?;