பேராசிரியர் பெ.விஜயகுமார்;
இந்திய விடுதலை எண்ணற்ற தியாகங்களால் உருவானது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர் என்று அனைத்துத் தரப்பு மக்களும் இரத்தம் சிந்திப் பெற்றது. நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் இருநூற்றாண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றினோம். ‘ஜாலியான்வாலா பாக் படுகொலை’ என்ற கொடூர நிகழ்வு ஆங்கிலேயர் நடத்திய வன்முறைக்கான உச்சகட்ட சாட்சியமாக இருந்தது. அமிர்தசரஸ் நகரத்தில் 1919 ஏப்ரல் பதிமூன்றாம் நாள் நடந்த அந்தச் சோகத்தை ’ஜாலியான்வாலா பாக்’ எனும் நூலில் வி.என்.தத்தா பதிவு செய்துள்ளார். ;