ஆடிட்டர் கலாவதி ஜெய்;
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. சிறு வயது முதலே இவர் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லூரிகளில் ஒரு திறமையான விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தவர். இவருடைய கணவர் சாப்ட்வேர் துறையில் பணிபுரிகிறார். இரண்டு மகள்கள் உள்ளனர். கல்யாணம், குடும்பம் என்று இருந்த முத்தமிழ்ச் செல்விக்கு ஏதாவது சாதனை செய்ய வேண்டும். சாதனைக்கும் - குடும்பத்துக்கும், கல்யாணத்துக்கும், வயது தடையில்லை என்று உறுதியாக நம்பினார். யாரும் செய்ய முடியாத அளவுக்கு சாதனை நிகழ்த்த வேண்டும் என்று மனஉறுதியுடன் இருந்தார். தான் செய்யும் சாதனை நம் மாநிலத்துக்கு பெருமை தேடி தரவேண்டும் என்று விரும்பினார். சிறுவயதில் இருந்தே மலை ஏற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்காக சிறுசிறு குன்றுகளில் ஏறினார். மலைகளில் ஏறினார். ;