டாக்டர் ஜி.பி.ஹனிமன் தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சின் முன்னாள் தலைவர்;
மழையும் குளிரும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதனால் தான் கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் செல்கிறோம். அதே நேரத்தில் மழை காலம் சில நோய்களையும் வரவேற்கும். அந்த நோய்கள் குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் அறிந்து வைத்திருந்தால் இந்தக் காலத்தினை அனுபவிக்கலாம். மழைக்கால நோய்கள்: வைரஸ் காய்ச்சல் : வைரஸ் காய்ச்சல் என்பது பல்வேறு வைரஸ்களால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான பொதுவான சொல். அதிகக் காய்ச்சல், உடல்வலி, தசைவலி, தலைவலி, சோர்வு, சில சமயங்களில் சொறி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.;