பேராசிாியா் பி.யோகீஸ்வரன் சென்னை;
பூலகின் இயக்கத்திற்கு மூலங்கள் நாலு என்றால் கல்லும் மண்ணும் காற்றும் நீருந்தானே. கல்லை வெட்டி வெட்டி எடுப்பது நாம். மண்ணைத் தோண்டித் தோண்டி எடுப்பதும் நாம். காற்றையும் நீரையும் மாசுபடுத்துவதும் நாமன்றி வேறு யார்? பொறுமையின் எல்லையைத் தாண்டி உறுமுகின்றன அந்த சக்திகள். கல் கோபக்கனலாய் மாறி உருண்டு உருண்டு வந்து நம் உயிரை எடுக்கிறது. மண் மனிதனை அதளத்தில் தள்ளி மூடுகிறது. காற்றும் நீரும் வேகமெடுத்து வந்து மனிதனைப் பிணக்குவியலாய் மாற்றுகிறது. இயற்கையை வெல்ல முயன்றால் இந்த இயற்கையே நம்மைச் சாய்த்து விடும்.;