வழக்கறிஞர் எஸ். செல்வகோமதி, துணை இயக்குநர், சோக்கோ அறக்கட்டளை;
காலையில் நாளிதழைத் திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டுத் தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் இந்தியாவில் குற்றங்கள் 2022 என்ற தலைப்பில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.;