கவிஞர் மு. முருகேசன்;
இராமசாமிக்கு இணையான நிலம் மற்றும் வசதி கொண்டவர் அவரது பக்கத்து வீட்டுக்காரரான துரைசாமி. இருவரும் உறவினர்கள். ஒருநாள் இராமசாமி, துரைசாமியைக் கூப்பிட்டு, நீ மகேந்திரனுக்கு சொந்தமான இடத்தில், அந்த குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் கோடவுண் கட்டப்போறதாகக் கேள்விப்பட்டேன். அது ரொம்ப தப்பான விஷயம். என்றார் ஐயா. .நீங்க எந்த காலத்தில் இருக்கிறீங்க. மகேந்திரன் செத்துப் போய் அஞ்சு வருசமாச்சு. அவங்கப் பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னே தெரியல்ல. ஏதோ ஒருத்தர் அமெரிக்காவில நாசாவில இருக்கிறதா சொன்னாங்க. இன்னொருத்தர் தில்லியில பெரிய அரசு வேலையில் இருக்கிறதா கேள்விப்பட்டேன். அவங்களுக்கு இந்த பத்து சென்ட் இடமா பெருசு? அதுவும் இந்தக் கிராமத்தில? நான் கடன் வாங்கி இந்த கோடவுனை கட்டிட்டு இருக்கேன். நம்ம கிராமத்து விவசாயிகளுக்கு, அவங்க விளைவிச்ச நெல் மூடைகளை பத்திரமா வைத்திருக்க இந்த கோடவுனை குறைந்த வாடகைக்குத் தரப்போறேன். நீங்களும் உங்க நெல்மூட்டைகளை வைக்கலாம். உங்களுக்கும் இதுனால பயனிருக்கும்.. என்று ஏகத்தாளமாகச் சொன்னார் துரைசாமி.;