பழையன கழிதல்... புதியன புகுதல்...

பழையன கழிதல்... புதியன புகுதல்...

குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணிநிறைவு) அகில இந்திய வானொலி,சென்னை;

சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் ஓடுகிற கைக்கடிகாரம் திடீரென நின்று விடும். அதன் குட்டிச் சக்கரத்தை விரலால் பலமுறைச் சுற்றி அதை மீண்டும் ஓட விட வேண்டும். வீட்டில் சுவரில் தொங்கும் பெண்டுலக் கடிகாரத்தின் பெண்டுலம் ஆடி ஆடி ஒரு மணி நேரத்திற்கொரு முறை அடித்து ஒலியிட்டு நமக்கு நேரத்தை வலியுறுத்தும். தற்போது பேட்டரியில் இயங்கும் கடிகாரங்கள் பேட்டரி தீரும் வரை ஓடிக் கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் நேரத்தைப் பார்த்து கொண்டே வேலை செய்தார்கள் நினைவுடன் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. காந்தி கடிகாரம் பார்க்காமலேயே வேலை செய்து கொண்டிருந்தார். இன்று அரசு அலுவலகங்களில் பலரும் கடிகாரத்தை பார்த்து கொண்டே வேலை செய்கிறார்கள் எப்போது வீடு செல்லும் நேரம் வருமென்று. காலம் எப்படி மாறி விட்டது. விநாடித் துளிகள் நிமிடங்களாய் மணிநேரமாய் வாரமாய் மாதமாய் வருடமாய் விரைவாய் வளர்ந்து விடுகிறது. 20 ஆம் நூற்றாண்டை நோக்கி கனவுகளோடு காத்திருந்தோம். அதுவும் முடிந்து விட்டது. இப்போது வருடம் 2025.;

Read More ...

Related Post