வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்.;
சமீப காலமாக உலகம் சந்தித்து வரும் சவால்களில் ஒன்று இயற்கை பேரிடர்கள். இடைவிடாது கொட்டித்தீர்க்கும் மழை, எதிர்பாராத நிலச்சரிவுகள், கடுமையான வெப்பம், பூகம்பம் உள்ளிட்ட அனைத்தும் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பேரிடர்கள். கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் சுமார் 440 கோடி பேர் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் பேரிடர் குறைப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளால் கூடப் பேரிடர்களிலிருந்து தப்பிக்கமுடியவில்லை.;