டாக்டர் இரா. சங்கீதா அரசு மருத்துவர், சென்னை;
உலகில் ஒவ்வொரு ஐந்து விநாடிக்கும் ஒருவர் பக்கவாதநோய் காரணமாக இறக்கிறார். உலகில் அதிகமானோர் உயிரிழக்கும் இரண்டாவது நோய் இதுதான். ஒவ்வோராண்டும் இந்தியாவில் 18 லட்சம் பேர் வாதநோயால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் 6.99 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்தார்கள் என்கிறது புள்ளிவிவரம். இந்தியாவில் பக்க வாதத்தின் தற்போதைய பரவல் விகிதம் 44.54 முதல் 150/100000 வரை மாறுபடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இந்நோய். என்றாலும், பெண்கள், முதியவர்கள் மத்தியில் வாதநோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாரடைப்புக்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதிக்கும் நோய் இது.;