முனைவர் இரா. உமாராணி, பேராசிரியர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், திருப்பரங்குன்றம், மதுரை - 625005;
ஒவ்வொரு நாளும் நாளிதழைப் புரட்டும்போது வெறிநாய்க்கடியால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படும் விவகாரத்தைக் காண்கிறோம். இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில், தமிழ்நாட்டில் 1.24 லட்சம் நாய் கடித்த வழக்குகள் மற்றும் ரேபிஸ் நோயால் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகம் வழங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில், 4.8 லட்சம் கடித்த வழக்குகள் மற்றும் ரேபிஸ் நோயால் 47 இறப்புகள் ஏற்பட்டன என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.;