ஆசிரியர் ப.திருமலை பட்டறிவுப்பதிப்பகம், மதுரை;
என்ன நைநா, காலையிலேயே ஆவி பறக்க ஏதோ பானம் அருந்தி கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டவாறே வந்தார் மைனா. இது குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஆம்லா டீ. இது தயாரிக்க, இரண்டு நெல்லிக்காய்கள், புதினா இலைகள் 6, இஞ்சி ஒரு துண்டு, ஓமம் அரை ஸ்பூன் தேன் சிறிது தேவை. நெல்லிக்காயை கொட்டையுடன் சிறிது தட்டி எடுக்கவும். இஞ்சியின் தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு தட்டிய இஞ்சி, நெல்லிக்காயையும் போட்டு ஓமத்தையும், புதினா இலைகளையும் கையால் நன்கு கசக்கி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். சிறிது நேரம் ஆற வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த சத்து மிகுந்த பானம் தயார். நல்லது தான். இப்போது குளிர் அதிகமாக இருக்கு.. பல இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கு.. என்ன செய்யலாம் நைநா..;