முனைவர் பி. சசிக்குமார் விஞ்ஞானி, இஸ்ரோ, திருவனந்தபுரம்;
ஒரு நாள் பள்ளியில் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, நீங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறீர்களா? ஒரே இடத்தில் இருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினேன். வகுப்பில் அமர்ந்து கொண்டு, நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறோம், என்று பெரும்பாலான பதில்கள் வந்தன. ஒரே ஒரு மாணவன் மட்டும் இல்லை, பூமியின் சுழற்சியால் ஒரு வினாடிக்கு அரைக் கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அவன் கூறியதுதான் சரி. ஆனால், எப்படி இந்த அரைக் கிலோ மீட்டர் வேகம் வந்தது? ;