வீ.வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
சிறந்த ஆளுமைப்பண்பு என்பது எது? நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்றுச் சிறப்பாக நடத்த முடியும். அதைத்தான் ஆசிரியை வசந்தி செய்தார். அந்தக் கிராமத்திலிருந்த அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றும் வசந்திக்கு தனது பணி மிகவும் சவாலாக இருந்தது. வகுப்பில் உள்ள 52 மாணவிகளும் பயம், விரக்தி, பதட்டம், கவலை உள்ளிட்ட ஏதாவது ஒன்றுக்கு ஆட்பட்டிருந்தனர். இதனால் அவர்களால் நல்ல மதிப்பெண் பெறமுடியவில்லை.;