சண்முக. ஞானசம்பந்தன் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் (பணி நிறைவு) மதுரை வானொலி;
சகிப்புத்தன்மை என்றால் என்ன? பல்வேறு சாதி, மதம், இனம் கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதோடு அதனை போற்றுவதும் தான் சகிப்பு தன்மை. நான், நானாக இருப்பதும், நீ நீயாக இருப்பதும், அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதே சகிப்புத்தன்மையின் அடையாளம். பன்முகத்தன்மை என்பது ஜனநாயகத்தை ஏற்று கொள்வது ஆகும். ஒற்றைப்பண்பை வலியுறுத்துவது வன்முறை என்பது நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னின் கருத்து. சகிப்புத்தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.;