கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;
அந்த பகவதிபுரம் கிராமம் கன்னியாகுமரி போகும் வழியில் சுசீந்திரத்தைத் தாண்டி சுமார் ஐம்பது, அறுபது வீடுகளே உள்ள மிகச் சிறிய கிராமம். கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். சிலர் நாகர்கோவிலுக்குச் சென்று ஏதோ சிறிய வேலை பார்த்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தலைவிரித்தாடுகிறது ஒரு பிரச்சனை. தண்ணீர் பிரச்சனை என வெள்ளந்தியா நினைத்துவிடாதீர்கள். உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயிலில் ஊர்கூட்டம். ஊர் பெரியவர் மதுசூதனப் பெருமாள் கூடவே பேச்சியப்பன், ராமசாமி என அவரது வயதையொத்தவர்கள் அவர் அருகில் உட்கார்ந்திருந்தனர். இவர்கள் பின்னால், வேலப்பன், காளி, கணேசன் என சிலர் நின்றிருந்தனர். கிராமத்தினர் சுமார் இருபது பேர் இவர்கள் முன்பு உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மாசமாக தொடர்ந்து நம்ம கிராமத்தில கோழிகள் காணாமல் போகுது. நம்ம கருப்பசாமிக்கு நேந்துவிட்டிருந்த (நேர்ச்சை) சேவலைக் காணோம். கோழி பிரச்சனை கொலையில முடியும்பாங்க. அப்படி ஒரு நிலை வந்திடக்கூடாது. இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க.. கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார் மதுசூதனப் பெருமாள். ;