ந. பாலமுருகன் எழுத்தாளர், தமிழக அரசின் பாடநூல் ஆசிரியர், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதாளர்.;
பெய்யும் மழை நீரை எல்லாம் தனக்குள் தேக்கி வைத்துக்கொண்டு வருடம் எல்லாம் அவற்றை வெளிவிட்டுக் கொண்டிருப்பவை சோலைக்காடுகள் ஆகும். அந்த சோலைக்காடுகள் போலவேதான் உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிகளை தனக்குள் வைத்துக்கொண்டு வருடம் எல்லாம் அவற்றை வெளிவிட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் குழந்தைகள். உயிர் வாழ காற்று தேவை என்பார்கள். நல்ல உள்ளம் வாழ நிச்சயம் குழந்தைகள் தேவை. குழந்தைகள்தான் ஒரு வீட்டின் மகிழ்ச்சிக்கான ஊற்று. குழந்தைகள்தான் பெற்றோர்களின் விடியல். குழந்தைகள்தான் ஆசிரியர்களின் ஆகச்சிறந்த படைப்புகள். அக்குழந்தைகள்தான் ஒரு சமுதாயத்தின் எதிர்காலத் தூண்கள்.;