டாக்டர் ஜி.பி. ஹனிமன் தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சில் முன்னாள் தலைவர்.;
சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்காக வந்த ஒருவர், ஏன் டாக்டர், மலேரியா, டெங்கு வருவதால் கொசுவை ஒழிக்கிறோம். அதுபோலக் குரங்கு அம்மை பரவுவதாகச் சொல்கிறார்கள். குரங்கை ஒழிக்க மாட்டேங்கிறாங்களே..? என அப்பாவித்தனமாகக் கேட்டார். 1958 ஆம் ஆண்டில் ஆய்வகத்தில் இந்த வைரஸ், குரங்குகளில் கண்டறியப்பட்ட பின்னர் விஞ்ஞானிகள் இதற்குக் குரங்கு அம்மை என்ற பெயரிட்டனர். 1970 ஆம் ஆண்டுக் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரியம்மை நோயை அகற்றுவதற்கான தீவிர முயற்சியின் போது சிலரிடம் குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. அதுவே மங்கி பாக்ஸ் என்னும் இந்நோயின் முதல் பதிவு ஆகும்.;