வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
ஒரு பிரபல பிஸ்கட் நிறுவனத்தின் விற்பனையானது உச்சத்தில் இருந்து வெகுவாகச் சரிந்து கொண்டே வந்தது. இயந்திரக் கோளாறு காரணமாகப் பெட்டியில் உள்ள சில பாக்கெட்டுகளில் பிஸ்கட் நிரப்பப்படாமல் கடைகளுக்குச் சென்றதே அதற்குக் காரணம். பல மாதங்களுக்குப் பிறகே இப்பிரச்சனை நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. இயந்திரக் கோளாறை பழுது பார்க்க கோடிக்கணக்கில் செலவாகும் என வல்லுநர் குழு கூறியது. அந்தச் செலவை ஈடுகட்ட முடியாத அளவிற்கு நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடுவதென நிர்வாகம் முடிவெடுத்தது.;