பேராசிரியர் பெ.விஜயகுமார்;
ஈழ விடுதலைக்காக நடந்த நீண்ட நெடிய போர் சொல்லில் அடங்கா அழிவில் முடிந்தது. விடுதலைப் புலிகள் சரணடைந்த பின்னரும் ஈவிரக்கமின்றி இயக்கத்தினரையும், அப்பாவி மக்களையும் முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது இலங்கை இராணுவம். ‘இயக்கம்’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட எல்டிடிஇ விடுதலைப் போரில் எடுத்த நிலைபாடுகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்’ நாவல் இவ்வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.;