முனைவர் த. ஹேமா வரலாற்றுத் துறைத்தலைவர், இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரி, மதுரை;
ஈரமான அறை, ஈரமான துணி, ஈரமான துடைப்பான் இப்படி ஈரமான சில விஷயங்களை நாம் ரசிப்பதில்லை. விரும்புவதில்லை.. தவிர்த்தும் விடுகிறோம். ஈரம் என்பது.. நம் மனதில் மெல்லிய குளிர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அள்ளமுடியாத நீரின் தன்மையும் உறைந்திருக்கும். என்றாலும் ஈரம் இன்றைக்கு அவசியமாகிறது. நிலத்தின் ஈரம்.. நீரினைத் தக்கவைக்கும். தூசியினைத் துரத்தும்.;