இவா் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள்...

இவா் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள்...

ஆடிட்டர் கலாவதி ஜெய்;

நந்தகுமார், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் இவர் தான் மூத்த பையன். இவருடைய தந்தை லாரி ஓட்டுநர், தாய் குடும்பத்தலைவி. குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பள்ளியில் தமிழ் வழியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். மற்ற குழந்தைகளைப் போல இவரால் கல்வி கற்க முடியவில்லை. சிறு வயதில் ஏற்பட்ட அதிகமான நோய்கள், தாக்கியதில் கற்றல் குறைபாடு நோயால் (டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டார். இதனால், இவரால் பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்துவதைச் சிறிது நேரம் கூடக் கவனிக்க முடியாது., உடனே தூங்கிவிடுவார். இவர் தூங்குவதைப் பார்க்கும் ஆசிரியர்களுக்கு இவர் மீது கோபமும் வெறுப்பும். பெஞ்சில் ஏறி நிற்கச் சொல்லி ஆசிரியர் தண்டனை கொடுத்தபோது நின்று கொண்டே தூங்கிவிட்டார். அந்தளவுக்கு உடலில் சோர்வு இவரை ஆக்கிரமித்திருந்தது. படித்ததை அவரால் நினைவில் வைக்கவேண்டும் என்றால் ஒரு முறைக்கு இருபது முறை படிக்கவேண்டும். இவருடைய செயல்பாடுகளால் இவரைத் தொடர்ந்து வைத்துக் கொள்ளப் பள்ளி விரும்பவில்லை. ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்புப் பாதியில் நிறுத்தப்பட்டது.;

Read More ...

Related Post