டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கை.;
உலகளவில் சுமார் 30 கோடி மக்களுக்கு அதாவது, பிறந்த குழந்தையில் இருந்து சிறார் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கு ஏற்படும் நோய் நிலையாக ஆஸ்துமா இருக்கிறது. ஆஸ்துமா என்பதன் தமிழ் பதம் இளைப்பு நோய் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி அவ்வப்போதோ அல்லது தொடர்ந்தோ மூச்சு விடுவதில் சிரமம், இளைப்பு, நெஞ்சு பகுதியில் இறுக்கம் மற்றும் இருமல் ஏற்படும் இரவில் உறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழிக்கும் நிலை ஏற்படக்கூடும். இந்த நோய்க்கான காரணம் நாம் சுவாசிக்கும் காற்றானது நமது நாசியில் தொடங்கி நுரையீரலின் அல்வியோலை எனும் நுண் சுவாசப்பைகளில் முற்றுப் பெறும். சுவாசப்பாதையில், உள்சென்று அதில் இருந்தும் ஆக்சிஜனை நமது நுரையீரல் கிரகித்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ;