இரா.நடராஜன் கல்வி அலுவலர், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை.;
மகாபாரதக் கதையைக் கிராமங்களில் கோயில்களில் கூறும்போது மங்கல வழக்காகத் தர்மர் பட்டாபிஷேகத்தோடு நிறைவு செய்வார்கள். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனக் கூறமாட்டார்கள். தர்மர் அரியாசனத்தில் அமரச் செல்லும்போது இந்த அரியாசனம், பெரியப்பா பிள்ளைகளின் சடலத்தின் மீது போடப்பட்டுள்ள அரியாசனம் என்ற உணர்வு அவரை உலுக்கியதாம். ஏனைய பாண்டவர்களும் அதே மனநிலையில் தான் இருந்தனராம். துச்சாதனன், துரியோதனன் ரத்தத்தைக் கூந்தலில் பூசி தான் கூந்தலை முடிவேன் என்ற பாஞ்சாலி சபதமும் பதைபதைத்து நின்றதாம்.. வன்முறையினால் பெற்ற வெற்றி நிரந்தர வெற்றியில்லை. வன்முறை இருபக்கமும் கூரான கத்தி. அது இரு பக்கத்திற்குமே விபரீத விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தப் பிறந்த மகாபாரதம், பட்டாபிஷேகத்திற்தோடு முடிந்தது ஏனோ?;