பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா;
நின்றநிலை ஆசனங்களில், அடுத்ததாக நாம் பயிற்சி செய்யப் போவது பாதஹஸ்த ஆசனம் ஆகும். இந்த ஆசனம் நின்ற நிலையில் முன்புறம் வளையும் ஆசனம் ஆகும். ‘பாத’ என்றால் கால் பாதங்கள் ஹஸ்த என்றால் உள்ளங்கைகள் ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள். இந்த ஆசனத்தில் பாதங்களின் இரண்டு பக்கத்திலும் உள்ளங்கைகளை வைத்திருப்பதால் பாதஹஸ்தாசனம் என்று அழைக்கப்படுகிறது.;