பெ.விஜயலட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா;
உடலையும், மனதையும் எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்பதே ஒவ்வொருவரது விருப்பமும் அதற்கான வழிதான் யோகா, வாழ்ந்தகலை, வாழ்கின்ற கலை, வாழும்கலை என மூன்று காலத்திற்கும் தன்னைப்பொருத்திக் கொண்டு காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்டு வருகிறது யோகா. இது ஒரு கலையாக, அறிவியலாக மட்டுமல்லாது விளையாட்டுக்கலையாகவும் மாறி பன்முகத்தன்மையோடு உலகெங்கும் பரவி விரைவில் ஒலிம்பிக்கில் இடம் பெறவும் தயாராக இருக்கிறது. ;