ஜெனோ மோகன் (சமூகச் செயல்பாட்டாளர்);
இன்று பெண்கள் இல்லாத துறைகளே கிடையாது. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்தவர்களாக ஆண்களுக்குச் சரிநிகராக வலம் வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல், சமூகம் போன்ற நிலைகளில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது என்றாலும், அவர்கள் பெண் என்பதாலேயே பல இன்னல்களை எல்லாத் தளங்களிலும் சந்திக்க வேண்டிய சூழல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்களைப் பாதுகாக்க, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட, எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஆண்-பெண் சமத்துவமின்மை குறித்த பாலினப் பாகுபாடுதான்.;