பருப்பில் இருக்கிறது உறுப்புகளின் ஆரோக்கியம்

பருப்பில் இருக்கிறது உறுப்புகளின் ஆரோக்கியம்

ஆர். பாக்கியம் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் (பணிநிறைவு);

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், வளரும் குழந்தைகளின் திசுக்கள் வளர்ச்சிக்கும், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கும் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது, அத்தகைய புரதச்சத்து சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில்தான். மேலும் புரதம் தவிர நோய் எதிர்ப்புச் சக்திக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களும், கனிமச் சத்துக்களும் பருப்பில் நிறைந்துள்ளன. துவரம்பருப்பு இந்தியர்கள் உணவில் முதலிடம் வகிக்கிறது. இதில் உள்ள காம்ப்ளக்ஸ் ஹார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருந்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு கருவளர்ச்சிக்கும், புதியசெல்கள் உருவாவதற்கும், உடலின் பாகங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் சிவப்பு அணுக்களின் பெருக்கதிற்கு உதவுகிறது. பருப்புவகைகள் ஒவ்வாமைகளில் விதிவிலக்காய் உள்ளது. Read More;

Read More ...

Related Post