நெசவுத்தொழிலாளர்கள் நிலை எப்படி இருந்தது..?

நெசவுத்தொழிலாளர்கள் நிலை எப்படி இருந்தது..?

பேராசிரியர் பெ.விஜயகுமார்;

சிறந்த கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பாராட்டப்படும் தொ,மு.சி.ரகுநாதன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். 1951இல் இவர் எழுதிய ‘பஞ்சும் பசியும்’ நாவல் தமிழின் முதல் சோசலிச யதார்த்த நாவலாகக் கொண்டாடப்படுகிறது. தொ.மு.சி. தன் நெருங்கிய நண்பரான புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். ‘பாரதி: காலமும் கருத்தும்’, ’இளங்கோ அடிகள் யார்?’, ‘புதுமைப்பித்தன் கதைகள்: விமர்சனங்களும், விஷமங்களும்’, ’பாரதியும், ஷெல்லியும்’, ’கங்கையும், காவிரியும்’, ஆகிய இலக்கிய விமர்சன நூல்கள் தமிழ் இலக்கிய உலகுக்குத் தொ.மு.சி. நல்கிய அரிய கொடையாகத் திகழ்கின்றன. சாகித்திய அகாதமி விருது, சோவியத் யூனியனின் நேரு விருது, பாரதி விருது போன்ற பல விருதுகளைத் தொ.மு.சி. பெற்றுள்ளார். இவரால் நடத்தப்பட்ட சாந்தி பத்திரிகையே கி.ரா, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, டி.செல்வராஜ் போன்ற அன்றைய இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தியது.;

Read More ...

Related Post