பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
திருமூலர் தனது திருமந்திரத்தில் எண்ணற்ற ஆசனங்களை விவரித்தார். பதஞ்சலியின் கூற்றுப்படி ஆசனம் என்பது உடலை உறுதியாகவும் இலகுவாகவும் வைக்கும் நிலை ஆகும். பொதுவாக ஆசனங்களை நான்கு வகைப்படுத்தலாம். அவை, 1. நின்ற நிலை ஆசனங்கள் 2. அமர்ந்த நிலை ஆசனங்கள் 3.மல்லாந்து படுத்த நிலை ஆசனங்கள் 4. குப்புற படுத்த நிலை ஆசனங்கள் ஒவ்வொரு ஆசனப் பயிற்சியும் வழக்கமாக நின்ற நிலை ஆசனங்களில் இருந்து தொடங்கப்படுகிறது. நின்ற நிலை ஆசனங்கள் உடல் முழுவதும் சக்தி பெறச் செய்கிறது. அதைத் தொடர்ந்து, அமர்ந்த நிலை ஆசனங்கள் செய்வதால், முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை நெகிழ்வு பெறச் செய்து வலுவாக்குகிறது. மல்லாந்து மற்றும் குப்புற படுத்த நிலை ஆசனங்கள் உடலுக்கு தளர்வையும் ஓய்வையும் தருவதோடு முக்கிய தசைகளையும் முக்கியமான உடல் உறுப்புகளையும் வலுவாக்கி உடலை நன்கு இயங்க வைக்கின்றது. ஒவ்வொரு வகை ஆசனங்களில் இருந்தும், குறிப்பாக பெண்களுக்கு உதவும் ஆசனங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.;