வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர், நமது மண்வாசம்.;
எல்லோருக்கும் தரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கனவு இருக்கிறது. கடலளவு எண்ணங்கள் இருக்கின்றன. நாம் உறங்கும் நேரம் தவிர, ஒரு நாளைக்குச் சுமார் 6200 எண்ணங்கள் நமது மனதில் வந்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். கனடா நாட்டைச் சார்ந்த குயின்ஸ் பல்கலைக்கழத்தின் அறிவியலாளர்களின் ஆய்வின்படி இது நிரூபிக்கப் பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, நம் மனதில் உதிக்கும் எண்ணங்களில் சுமார் 80 சதவிகிதம் எதிர்மறையானவை என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 5000 எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக நாம் போரிட்டு நேர்நிலைத்தன்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. இப்போராட்டத்திற்கு நம்மை நிரந்தரமாகப் பக்குவப் படுத்திக்கொள்வது எவ்வாறு?;